பிரதமரின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பு
மயிலாடுதுறை புதிய பஸ் நிலையத்தில் பிரதமரின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது
மயிலாடுதுறை
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் 100-வது நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. இந்த நிகழ்ச்சி நகர பா.ஜ.க. மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் சார்பாக மயிலாடுதுறை புதிய பஸ் நிலைய வளாகத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்டத்தலைவர் குருசங்கர் தலைமை தாங்கினார். ஊடகப் பிரிவு துணைத்தலைவர் அழகுராஜ் முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் வினோத் வரவேற்றார். மத்திய அரசு தலைமை வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில் பாலு, உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், திரளான பயணிகள் கலந்துகொண்டு பிரதமரின் நேரடி உரை மற்றும் அதன் தமிழாக்கத்தை பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story