வீட்டின் பீரோவை உடைத்து 3¾ பவுன் நகைகள் திருட்டு


வீட்டின் பீரோவை உடைத்து 3¾ பவுன் நகைகள் திருட்டு
x

வீட்டின் பீரோவை உடைத்து 3¾ பவுன் நகைகள் திருட்டு போனது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பேலஸ் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். இந்த நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3¾ பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் விக்னேஷ் புகார் அளித்தார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story