வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை திருட்டு
வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை திருட்டுபோனது.
தஞ்சாவூர்
திருவோணம் பிரதான சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே செல்வம் (வயது75) என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு செல்வம் வீட்டை பூட்டிவிட்டு ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் சாமி அறையில் இருந்த 4 பவுன் நகையினை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து செல்வம் திருவோணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story