தூத்துக்குடியில்வீட்டு கதவை உடைத்து நகை, பணம் திருட்டு


தூத்துக்குடியில்வீட்டு கதவை உடைத்து   நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்வீட்டு கதவை உடைத்து நகை, பணம் திருடிசென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு முல்லைநகரை சேர்ந்தவர் டேனியல். இவருடைய மனைவி சிமிர்லா (வயது 38). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் ஜோஸ்வா சைரஸ் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், கடந்த 9-ந் தேதி குடும்பத்துடன் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். நேற்று மீண்டும் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிமிர்லா வீட்டுக்குள் சென்று பார்த்து உள்ளார். வீட்டில் பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம், 2½ பவுன் நகை ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story