வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் நகை-பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் நகை-பணம் திருட்டு
x

வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

அரியலூர்

வி.கைகாட்டி:

துக்க காரியத்திற்கு சென்றார்

அரியலூர் புது மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 30-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊரான ஆண்டிபட்டாக்காடு கிராமத்திற்கு துக்க காரியத்திற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று அவரது அண்ணன் சுப்ரமணியன் அவரது வீட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியில் செல்வதற்காக வந்தபோது, சுப்பிரமணியன் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்திருந்ததை கண்டு அவருக்கு தகவல் தெரிவித்தார்.

நகை-பணம் திருட்டு

இதனையடுத்து நேற்று இரவு சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 5½ பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story