வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு
நாகூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகூர்:
நாகூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 பவுன் நகைகள் திருட்டு
நாகூர் அருகே தெற்கு பால்பண்ணைச் சேரி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மனைவி ராணி (வயது60). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார்.
மீண்டும் மாலையில் ராணி தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸ் நாய் வரவழைக்கப்பட்டது. போலீஸ் மோப்பநாள் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
திருட்டு நடந்த வீட்டில் இருந்த கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் பதிவு செய்தனர். இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.