வீட்டின் பூட்டை உடைத்து 7¾ பவுன் நகைகள் திருட்டு
முசிறி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7¾ பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி
முசிறியை அடுத்த வேளாகநத்தம் மேற்கு காலனியை சேர்ந்தவர் பழனிவேல். விவசாயி. இவரது மனைவி மகாலட்சுமி (வயது 39). சம்பவத்தன்று தம்பதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு மாங்கரைபேட்டை அருகே உள்ள வயலுக்கு சென்றுவிட்டனர்.
இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 7¾ பவுன் தங்க நகைகளை திருடி சென்றுவிட்டனர். இது குறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story