வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x

வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 45) விவசாயி. இவர் நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வயல் வேலைக்கு சென்றுள்ளார்.

மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1¼ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story