ஆட்டோ டிரைவரை அடித்து கொலை செய்த தம்பி கைது
ஆட்டோ டிரைவரை அடித்து கொலை செய்த தம்பி கைது
கபிஸ்தலம் அருகே ஆட்டோ டிரைவரை அடித்து கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
அடித்துகொலை
தஞ்ைச மாவட்டம் கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜா(வயது36). ஆட்டோ டிரைவர். இவரது தம்பி முருகேந்திரன்(27). நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முருகேந்திரன், ராஜாவை செங்கல்லால் தலையில் அடித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் ராஜா நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார் என கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
மருத்துவ பரிசோதனையில் ராஜா சாவில் சந்தேகம் இருப்பதாக டாக்டர் கூறினார். அதன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணயில் ராஜாவை, முருகேந்திரன் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ டிரைவரை தம்பி அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.