அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது


அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது
x

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழமைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குழந்தைசாமியின் மகன்கள் அன்புரோசு(54), அமுல்ராஜ் (50). இவர்கள் இருவருக்கும் இடையே வயல் வரப்பு ெதாடர்பாக பிரச்சினை வந்தது. இந்நிலையில் அமுல்ராஜ் வயலில் இருந்த முந்திரி கிளைகள் அன்புரோசு வயல் பக்கத்தில் நீட்டிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அன்புரோசு அந்த முந்திரி கிளைகளை வெட்டியுள்ளார். இது தொடர்பாக அண்ணன்-தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதில் அமுல்ராஜ், அன்புரோசின் காலில் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அன்புரோசுக்கு காலில் காயம் ஏற்பட்டது. மேலும் அன்புரோசு, அமுல்ராஜை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அன்புரோசு கொடுத்த புகாரின்பேரில் அமுல்ராஜ் மீதும், அமுல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் அன்புரோசு(54), அவரது மனைவி ஜோஸ்பின்மேரி மீதும் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்தார். இதில் அமுல்ராஜை போலீசார் கைது செய்தனர்.


Next Story