புகையிலை பொருட்களை விற்ற அண்ணன்-தம்பி கைது


புகையிலை பொருட்களை விற்ற அண்ணன்-தம்பி கைது
x

புகையிலை பொருட்களை விற்ற அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

கரூர்

புகையிலை பொருட்களை விற்ற அண்ணன்-தம்பி கைது

குளித்தலை, ஜன.11-

குளித்தலை அருகே உள்ள பரளி 4 ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன் பேரில் அங்குள்ள கடைகளில் குளித்தலை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பரளி பகுதியை சேர்ந்த நீலமேகம் (வயது 30), அவரது தம்பி மகேந்திரன் (28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களது கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.13 ஆயிரத்து 430 மதிப்புள்ள 9 கிலோ 150 கிராம் எடை கொண்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் பான் மசாலா, பாக்கு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story