சிவகங்கை அருகே தொழிலாளி அடித்துக்கொலை அண்ணன் கைது
சிவகங்கை அருகே தொழிலாளியை அடித்துக்கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை அருகே தொழிலாளியை அடித்துக்கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.
அடித்துக்கொலை
சிவகங்கை அருகே உள்ள பாசாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 40). இவரது அண்ணன் துரைக்கண்ணு (41). இருவரும் அருகருகே வசிக்கின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து காலி மனை ஒன்றை கடந்த 3 மாதத்திற்கு முன்பு வாங்கினார்கள். அப்போது துரைக்கண்ணு ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்தாராம். செல்லமுத்து ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்துள்ளாராம். இதனால் இடம் வாங்கியதற்கு சரிபாதி பணம் தரும்படி செல்லமுத்து கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த துரைக்கண்ணு கம்பால் செல்லமுத்துவை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த செல்லமுத்து சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அண்ணன் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்லமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைக்கண்ணுவை கைது செய்து செய்தனர்.