பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தேசிய பணமாக்கல் திட்டத்தை எதிர்த்து, திண்டுக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

அனைத்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் அருளானந்தம் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கத்தின் திண்டுக்கல் கிளை துணை செயலாளர் சுஜாதா முன்னிலை வகித்தார். கூட்டமைப்பின் கன்வீனர் அய்யனார் வரவேற்றார்.

இதில் ஓய்வூதியர் சங்கத்தின் மாநில உதவி செயலாளர் ஜான்போர்ஜியா, உதவி தலைவர் விஜயரெங்கன், கூட்டமைப்பின் மாவட்ட துணை செயலாளர் சுந்தரி, கிளை செயலாளர்கள் செபாஸ்டியன், ஜோதிநாதன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேசிய பணமாக்கல் திட்டத்தில் நிதி திரட்டுவதற்கு பி.எஸ்.என்.எல். கோபுரம், கண்ணாடியிழை கேபிள்களை தனியாருக்கு வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் 4ஜி சேவை இல்லாததால் நிறுவனத்தின் பொருளாதார நிலைமை சீரழிந்து வருகிறது. எனவே பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

1 More update

Next Story