பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்
நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்
கன்னியாகுமரி
நாகர்கோவில்,
பி.எஸ்.என்.எல்.அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. இதில் ஊதிய விகிதத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட வேண்டும், 31-1-2022 அன்று உள் காலி பணியிடங்களை கணக்கில் கொண்டு இலாகா தேர்வுகள் நடத்தப்பட வேண்டும், காலிப்பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தர்ணா போராட்டத்துக்கு கூட்டமைப்பு நிர்வாகி லெட்சுமணப்பெருமாள் தலைமை தாங்கினார். ராஜகோபால் தொடக்க உரையாற்றினார். தர்ணாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story