பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் திருட்டு
ஆலங்குளம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
தென்காசி
ஆலங்குளம்:
ஆலங்குளம்- அம்பை சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இங்கு 5 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறைக்கு பின்னர் நேற்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது தகவல் தொடர்பு சாதனங்கள், கேபிள்கள் மற்றும் பேட்டரிகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. திருடர்கள் கேபிள்களை வெட்டி எடுத்துச் சென்றதால் ஆலங்குளம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தகவல் தொடர்பு சேவை, இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. ஊழியர்கள் அளித்த தகவலின் பெயரில் வந்த ஆலங்குளம் போலீசார் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story