பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி மாணவிக்கு பாராட்டு


பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி மாணவிக்கு பாராட்டு
x

பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சென்னை தேசிய மாணவர் படையின் இயக்குனரகம் சார்பில் சிறந்த கேடட் தேர்வு மதுரையில் உள்ள என்.சி.சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற கேடட்ஸ் கலந்து கொண்டனர். இதில் தூத்துக்குடி சரகத்தின் கீழ் இயங்கும் சிவகாசி பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியின் என்.சி.சி. மாணவி சுகன்யா சிறந்த கேடட் ஆக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு இயக்குனர் ஜெனரல் கமடோர் அதுல்குமார் ரஸ்தோகி மற்றும் கர்னல் அமித்குப்தா ஆகியோர் விருது, சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார். இந்த மாணவி என்.சி.சி. சார்பில் நடைபெற்ற பல்வேறு முகாமில் கலந்து கொண்டு ஒவ்வொரு முகாமிலும் பல்வேறு பயிற்சியில் சிறந்து விளங்கியமைக்காக சிறந்த கேடட் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற மாணவிக்கு கல்லூரியின் இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார், கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, தேசிய மாணவர் படையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரெங்கராஜ் ஆகியோர் பாராட்டினர்.


Next Story