விவசாயிகள் சங்கம் சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்


விவசாயிகள் சங்கம் சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்
x

குடியாத்தத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

வேலூர்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் குடியாத்தத்தில் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மேல்செட்டிகுப்பம், தட்டப்பாறை, பொன்னாங்கட்டியூர், அக்ராவரம், எர்த்தாங்கல், சைனகுண்டா, கொல்லைமேடு உள்ளிட்ட இடங்களில் நடந்த இந்த போராட்டங்களில் மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன், மாவட்ட தலைவர் பி.சக்திவேல், பேரணாம்பட்டு தாலுகா பொறுப்பாளர் சி.எம். நடராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் குமாரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.கோட்டீஸ்வரன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் பாண்டுரங்கன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் குடியாத்தம் தாலுகா தலைவர் தசரதன் மற்றும் பல்வேறு அமைப்புகளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பட்ஜெட் நகலை எரித்தனர்.


Next Story