புதர் மண்டிய பள்ளி வளாகம்


புதர் மண்டிய பள்ளி வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் புற்கள், செடி-கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் விளையாடுவதற்கு சிரமமாக உள்ளது. எனவே பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story