ரூ.6.93 கோடி மதிப்பீட்டில்பெரியார் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் மைய கட்டிடம்காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.6.93 கோடி மதிப்பீட்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் மைய கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சேலம்
கருப்பூர்,
சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலைக்கழக வளர்ச்சி தொழில் முனைவோர் மற்றும் அடைகாக்கும் மைய கட்டிடம் 3 தளங்களுடன் புதிதாக ரூ.6 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் மாநில உயர்கல்வித்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையொட்டி சேலம் பெரியார் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றினர். இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், பதிவாளர் பாலகுருநாதன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கதிரவன், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story