கட்டிட வரைபட அனுமதி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்
காாியாபட்டி பகுதியில் கட்டிட வரைபட அனுமதி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என பேரூராட்சி தலைவர் செந்தில் கூறினார்.
காரியாபட்டி,
காாியாபட்டி பகுதியில் கட்டிட வரைபட அனுமதி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என பேரூராட்சி தலைவர் செந்தில் கூறினார்.
கவுன்சிலர்கள் கூட்டம்
காரியாபட்டி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், துணைத்தலைவர் ரூபி சந்தோஷம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன் காரியாபட்டி பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளராக இருந்த ராம்குமார் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கண்காணிப்பு கேமரா
பின்னர் கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-
கவுன்சிலர் முத்துக்குமார்:-
காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
தீபா:- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் அச்சம்பட்டி வரை வாருகால் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒத்துழைப்பு வழங்கிய பேரூராட்சி தலைவர் செந்தில் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கட்டிட வரைபடம்
நாகஜோதி:- காரியாபட்டி பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் வீடுகள், தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
பேரூராட்சி தலைவர் செந்தில்:-
காரியாபட்டி பேரூராட்சியில் கட்டிட வரைபடம் அனுமதி கேட்டு பலர் விண்ணப்பம் செய்து வருகின்றனர். இவற்றை முறையாக பதிவு செய்து முன்னுரிமையின் அடிப்படையில் கட்டிட வரைபட அனுமதி வழங்கப் படும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் லியாகத்அலி, முனீஸ்வரி தர்மமுனீஸ்வரன், முகமது முஸ்தபா, சங்கரேஸ்வரன், வசந்தா செந்தில், நாகஜோதி ராமகிருஷ்ணன், சரஸ்வதி பாண்டியராஜன், தீபா பாண்டியராஜ், சத்தியபாமா தாமோதரகண்ணன், செல்வராஜ், முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.