புகழூர் நகராட்சி கூட்டம்


புகழூர் நகராட்சி கூட்டம்
x

புகழூர் நகராட்சி கூட்டம் நடந்தது.

கரூர்

புகழூர் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கனிராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில், புகழூர் நகராட்சியில் ரூ.2 கோடியே 23 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் ஓராண்டிற்கு திடக்கழிவு மேலாண்மை பணிகளை வெளிக்கொணர்வு முகமை மூலம் பணிகள் மேற்கொள்ளுதல், கக்கன் காலனி, ஓனவாக்கல்மேடு, ஹைஸ்கூல்வீதி, சுந்தராம்பாள்நகர், கந்தசாமிபாளையம், ராஜாநகர் ஆகிய தெருக்களில் ரூ.51 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் தார் சாலை மற்றும் சிமெண்டு சாலை சீரமைப்பு செய்தல், ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் பொருத்துதல், ரூ.18 லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக 9 எண்ணிக்கையிலான பேட்டரி மூலம் இயங்கும் தள்ளுவண்டிகள் வாங்குதல்.

ரூ.43 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புகழூர் நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை பணிக்காக 6 எண்ணிக்கையிலான இலகுரக வாகனம் வாங்குதல் என்பன உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நகராட்சி உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story