புகழூர் நகராட்சி கூட்டம்
புகழூர் நகராட்சி கூட்டம் நடைபெற்றது.
புகழூர் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் கனிராஜ் வரவேற்று பேசினார்.
புகழூர் நகராட்சிக்குட்பட்ட அன்னை நகர் தெருவில் உள்ள மண் சாலையை ரூ.35 லட்சத்தில் தார் சாலையாக மாற்றுதல், மாரியப்ப பிள்ளை காலனியில் மண் சாலையை ரூ.61 லட்சத்தில் தார் சாலையாக மாற்றுதல், கலைமகள் நகர் முதல் உழவர் சந்தை வரை ரூ.37 லட்சத்தில் மழை நீர் வடிகால் அமைத்தல், சுந்தராம்பாள் நகர் பகுதியில் ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தில் பகிர்மான குழாய் விஸ்தரிப்பு செய்தல், ரூ.18½ லட்சத்தில் மழை நீர் வடிகால் மராமத்து செய்தல்.
புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் சர்க்கரை ஆலை மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் இருந்து வெளிவரும் பக்காஸ் துகள்கள் மற்றும் சாம்பல் துகள்கள் வீடுகளில் பரவுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட ஆலைகளை கேட்டு கொள்வது என்பன உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகராட்சி உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.