புகழூர் நகராட்சி சாதாரண கூட்டம்


புகழூர் நகராட்சி சாதாரண கூட்டம்
x

புகழூர் நகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது.

கரூர்

புகழூர் நகராட்சி சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் ேநற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கனிராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் புகழூர் நகராட்சிக்கு சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் அலுவலக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1 ேகாடியே 14 லட்சம் மதிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.86 லட்சத்திற்கு 8-வது வார்டு வேலாயுதம்பாளையம் பகுதியில் நகராட்சி வணிக வளாகம் கட்டுவதற்கு மதிப்பீடு தயார் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. புகழூர் நகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில் ரூ.25 லட்சத்தில் புதிதாக பூங்கா அமைத்தல். மூலிமங்கலம் பிரிவு சாலை முதல் நானப்பரப்பு பிரிவு சாலை வரை ரூ.23 லட்சத்தில் தார் சாலை அமைத்தல்.

டி.என்.பி.எல். சமுதாய கூடம் முதல் ஆத்திகாபள்ளம் வாய்க்கால் வரை ரூ.15 லட்சத்து 60 ஆயிரத்தில் மழை நீர் வடிகால் அமைத்தல்.ரூ.36 லட்சத்து 70 ஆயிரத்தில் நகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளுதல். தமிழக முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை புகழூர் நகராட்சிக்கு சொந்தமான 8 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டியினை வழங்குவதற்காக ரூ.19 லட்சத்து 65 ஆயிரத்தில் காகித ஆலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைகண்டித்து காங்கிரஸ் கட்சியை கவுன்சிலர் சுரேஷ் கருப்பு சட்டை அணிந்து கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டார்.


Next Story