பழுதான நிலையில் பண்ணைக்கிணர் ஊராட்சி அலுவலகம்


பழுதான நிலையில் பண்ணைக்கிணர் ஊராட்சி அலுவலகம்
x
திருப்பூர்


குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்ணைக்கிணர் ஊராட்சி. பண்ணைக்கிணர் ஊராட்சியில் பண்ணைக்கிணர், கோழி குட்டை, ஜல்லிப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன, பண்ணைக்கிணர் ஊராட்சியில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகம் உள்ளது.

ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் கட்டிடத்தின் பல இடங்களில் விரிசல் விழுந்தும் ஊராட்சி அலுவலக கட்டிடத்தின் முன் பக்க கான் கிரீட்டுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. ஊராட்சிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பணி செய்யவே பயப்படும் நிலையில் ஊராட்சி கட்டிடம் உள்ளது. எனவே பழுதான நிலையில் உள்ள ஊராட்சி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story