மாட்டு வண்டி போட்டி; மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


மாட்டு வண்டி போட்டி; மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பாக 4-ம் ஆண்டு மாட்டுவண்டி போட்டி நடந்தது. இப்போட்டியில் மதுரை, தூத்துக்குடி, நெல்லை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 54 ஜோடி மாடுகள் பங்கேற்றன. சின்ன மாடு, பெரிய மாடு என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. மாட்டு வண்டி போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், வேடப்பட்டி செல்லசாமி நாடார் நினைவாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம், விளாத்திகுளம் ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி மற்றும் ஸ்காட் நிறுவனம், தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது. முகாமினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன் ராஜ், மாநில ஊராட்சி செயலாளர் சங்க தலைவர் வேல்முருகன், மாவட்ட ஊராட்சி சங்க தலைவர் கற்குவேல், தி.மு.க வார்டு செயலாளர் ஸ்டாலின் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story