மாட்டு வண்டி எல்கை பந்தயம்


மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x

கீழாநிலைக்கோட்டை அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், கீழாநிலைக்கோட்டை அருகே நம்பூரணிப்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மது எடுப்பு விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 27 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கு பெற்றன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவாக நடத்தப்பட்டது.

பெரிய மாடு பிரிவு

முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் பந்தய தொலைவு போய் வர 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 8 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரிசு கே.புதுப்பட்டி கே.ஏ. அம்பாள், 2-ம் பரிசு மேலூர் அஜ்மல் கான், 3-ம் பரிசு வல்லாளப்பட்டி மகாவிஷ்ணு, 4-ம் பரிசு தள்ளாம்பட்டி மங்கையர்கரசி ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன. இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 19 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் பந்தயம் 2 பிரிவாக நடத்தப்பட்டது. பந்தயத் தொலைவு போய் வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பரிசு

இதில் முதல் பரிசு வாழ்றமாணிக்கம் லட்சுமி சண்முகம், நம்பூரணிப்பட்டி காசி, 2-ம் பரிசு மாவூர் பிரகன்யா மோகன், தேவகோட்டை பிரதாப் மொபைல்ஸ், 3-ம் பரிசு வடிக்காப்பள்ளம் பாலுசாமி, நாட்டாமை சூர்யா, 4-ம் பரிசு காரைக்குடி கழனிவாசல் செல்வம், கருவிடசேரி செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன. இதைதொடர்ந்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நம்பூரணிப்பட்டி-கல்லூர் சாலையில் நடைபெற்றது. சாலையின் இருபுறமும் திரளான ரசிகர்கள் பந்தயத்தை கண்டு ரசித்தனர்.


Next Story