காதக்கிணற்றில் மாட்டு வண்டி போட்டி
காதக்கிணற்றில் மாட்டு வண்டி போட்டி நடத்தப்பட்டது.
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா மற்றும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓராண்டு சாதனையை முன்னிட்டு காதக்கிணறு பகுதியில் இரட்டை மாட்டு வண்டி போட்டி நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் 2 பிரிவுகளாக நடந்தது. முதல் பிரிவில் 10 மைல் தூரத்திற்கு பெரிய மாடு போட்டி நடந்தது. அதற்கு முதல் பரிசாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 99-ம், 2-ம் பரிசாக ரூ.2 லட்சத்து 99-ம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 99-ம், ஆறுதல் பரிசாக ரூ.20 ஆயிரத்து 99-ம், சாரதிகளுக்கு கொடி பரிசு ரூ.5 ஆயிரத்து 99-ம், எல்கை பரிசு ரூ.5 ஆயிரத்து 99-ம் வழங்கப்பட்டன.
இரண்டாவது பிரிவில் 6 மைல் தூரத்திற்கு சிறிய மாடு போட்டி நடந்தது. அதில் முதல் பரிசு ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 99-ம், 2-ம் பரிசு ரூ.1 லட்சத்து 99-ம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரத்து 99-ம், ஆறுதல் பரிசு ரூ.10 ஆயிரத்து 99-ம், சாரதிகளுக்கு கொடி பரிசு ரூ.3 ஆயிரத்து 99-ம், எல்கை பரிசு ரூ.3 ஆயிரத்து 99-ம் வழங்கப்பட்டன.
போட்டியின் முடிவில் அமைச்சர் மூர்த்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.