கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
திருச்சுழி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
திருச்சுழி,
திருச்சுழி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
பொங்கல் திருவிழா
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கள்ளக்காரி கிராமத்தில் ஸ்ரீ மொட்டை இருளப்பசாமி கோவில் பொங்கல் திருவிழா மற்றும் 37-வது குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டு வண்டி பந்தயமானது கள்ளக்காரியில் இருந்து தொடங்கி கீழ்க்குடி வழியாக துத்திநத்தம் வரை போட்டி நடைபெற்றது. இதில் 8 பெரிய மாட்டு வண்டிகளும், 18 சிறிய மாட்டுவண்டிகளும் கலந்து கொண்டன. இந்த போட்டியில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பேர் கலந்து கொண்டனர்.
சிறந்தவர்களுக்கு பரிசு
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ரூ. 40 ஆயிரம், 2-வது பரிசாக ரூ. 35 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது. திருச்சுழி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.