மாட்டு வண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்
x

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை

காரைக்குடி

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடி செஞ்சை பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 வண்டிகள் கலந்து கொண்டன. பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பரளி செல்வி மற்றும் அண்ணாநகர் பாலா வண்டியும், 2-வது பரிசை கணக்கன்பட்டி சற்குரு வண்டியும், 3-வது பரிசை அமராவதிபுதூர் வேலுகிருஷ்ணன் வண்டியும், 4-வது பரிசை சாக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி வண்டியும், 2-வது பரிசை புதுப்பட்டி அம்பாள் மற்றும் காரைக்குடி மாயழகு பூசாரி வண்டியும், 3-வது பரிசை அரியக்குடி சுப்பையா மற்றும் ஏரியூர் ஆசிரியர் விஜயவேல் வண்டியும், 4-வது பரிசை நல்லாங்குடி சசிகுமார் மற்றும் தளக்காவயல் காளிமுத்து வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story