மாட்டு வண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்
x

காரைக்குடி அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி அருகே பெத்தாட்சி குடியிருப்பு கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் பெத்தாச்சிகுடியிருப்பு-ஏம்பல் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 18 வண்டிகள் கலந்துகொண்டன. பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக போட்டி நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் பங்கேற்றன.

இதில், முதல் பரிசை திருவாப்பாடி பெரியசாமி வண்டியும், 2-வது பரிசை வைரிவயல் வீரமுனியாண்டவர் மற்றும் பனம்பட்டி நரிவிழி அம்பாள் ஸ்டோர்ஸ் வண்டியும், 3-வது பரிசை வாள்ரமாணிக்கம் ஆனந்தபிரதர்ஸ் மற்றும் கானாடுகாத்தான் அருண் வண்டியும் பெற்றது.

பரிசுகள்

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டன. இந்த போட்டியில் முதல் பரிசை ராதிகா மற்றும் செம்பவயல் சிவன்சக்தி வண்டியும், 2-வது பரிசை அரிமளம் மணி வண்டியும், 3-வது பரிசை பீர்க்கலைக்காடு பெரியசாமி வண்டியும் பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story