மாட்டு வண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்
x

மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

சிவகங்கை

சிவகங்கை அருகே கவுரிப்பட்டி கிராமத்தில் உள்ள சந்தகருப்பர் கோவில் முளைப்பாரி உற்சவத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. கண்டிப்பட்டி-பாகனேரி சாலையில் நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 10 வண்டிகள் கலந்துகொண்டன.

இதில் முதல் பரிசை அப்பன் திருப்பதி ராகுல் மற்றும் கொட்டக்குடி அஜித் வண்டியும், 2-வது பரிசை கவுரிப்பட்டி மணிமுத்து மற்றும் கம்பம் பெரியகருப்பர் வண்டியும், 3-வது பரிசை கவுரிப்பட்டி பெரியகருப்பன்லிங்கேஷ் மற்றும் நல்லாங்குடி முத்தையா வண்டியும் பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story