தை பொங்கல் விழாவையொட்டி பந்தயம்:சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்


தை பொங்கல் விழாவையொட்டி பந்தயம்:சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் தை பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் தாயமங்கலம்-சிவகங்கை சாலையில் நடைபெற்றது

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் தை பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் தாயமங்கலம்-சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 36 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை எட்டிமங்கலம் கணேசன் வண்டியும், 2-வது பரிசை கல்லுப்பட்டி குருந்தடியான் வண்டியும், 3-வது பரிசை நகரம்பட்டி கண்ணதாசன் வண்டியும் பெற்றன,. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 26 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை கொடிக்குளம் கவுதம் வண்டியும், 2-வது பரிசை பாகனேரி பிரதாப் வண்டியும், 3-வது பரிசை தேவகோட்டை பிரசாத் மொபைல்ஸ் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை சின்னமாங்குளம் அழகு வண்டியும், 2-வது பரிசை நகரம்பட்டி கண்ணன் வண்டியும், 3-வது பரிசை சக்கந்தி லெட்சுமணன் வண்டியும் பெற்றது.

இதேபோல் சிவகங்கை அருகே பாகனேரியில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 33 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பொிய மாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை சின்னமாங்குளம் மணிமாலா வண்டியும், 3-வது பரிசை வல்லாளப்பட்டி மகாவிஷ்ணு வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 26 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை நெற்புகப்பட்டி சதீஷ்குமார் வண்டியும், 2-வது பரிசை பாகனேரி ஸ்ரீநிதி வண்டியும், 3-வது பரிசை விராமதி செல்வமணி வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை நெய்வாசல் பெரியசாமி வண்டியும், 3-வது பரிசை கொட்டானிப்பட்டி தொட்டிச்சியம்மன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியின் போது இலக்கை நோக்கி மாட்டு வண்டிகள் வேகமாக ஓடின. அதை ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்.


Next Story