மாட்டு வண்டி பந்தயம்
மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
சிவகங்கை,
தி.மு.க. தெற்கு ஒன்றியம் மற்றும் மாணவரணி சார்பில் சிவகங்கையில் மதுரைரோடு-கரும்பாவூர் சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 57 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 16 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை விராமதி தையல் நாயகி மற்றும் அம்மன்பேட்டை சகாயராணி வண்டியும், 2-வது பரிசை அதிகரை வேங்கை மற்றும் பொன்பேத்தி மருதுபாண்டிய வல்லாத்தேவர் வண்டியும், 3-வது பரிசை எட்டிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பங்கஜம் கணேசன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 41 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை ஓரியூர் செல்வா வண்டியும், 2-வது பரிசை சிவகங்கை அருண் ஸ்டியோ வண்டியும், 3-வது பரிசை கள்ளந்திரி நிலவு வண்டியும் பெற்றது. இதைத்தொடா்ந்து நடைபெற்ற இரண்டாவது பிரிவில் முதல் பரிசை இளஞ்சாவூர் பாலசுப்பிரமணியன் வண்டியும், 2-வது பரிசை செங்கரை ராஜமாணிக்கம் வண்டியும், 3-வது பரிசை அவனியாபுரம் முருகன் நகை கடை வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.