கல்லல் அருகே மாட்டு வண்டி பந்தயம்
கல்லல் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
காரைக்குடி
கல்லல் அருகே செம்பனூர் காசி வல்லநாட்டு கருப்பர் கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் செம்பனூர்-சொக்கநாதபுரம் சாலையில் நடைபெற்றது. இதில் 41 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை ஆரப்பாளையம் ஆனந்த் வண்டியும், 3-வது பரிசை கண்டனிப்பட்டி ராஜகண்ணப்பன் வண்டியும் பெற்றது.
சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 31 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை குமாரப்பட்டி ஜெயராஜ் மற்றும் நகரம்பட்டி சம்பத் வண்டியும், 2-வது பரிசை செம்பனூர் பசும்பொன் பாலா வண்டியும், 3-வது பரிசை புதுப்பட்டி இளையராஜா மற்றும் கீழகாவனூர் ஆர்த்திகா வண்டியும் பெற்றது. 2-வது பிரிவில் முதல் பரிசை ஏரியூர் விஜயவேல்தேசிங்குராஜா மற்றும் அடுகப்பட்டி மகாபாலா வண்டியும், 2-வது பரிசை கோட்டணத்தம்பட்டி சிவபாலன் வண்டியும், 3-வது பரிசை கம்பம் பேச்சியம்மன் மற்றும் செம்பனூர் சரவணன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.