மாட்டு வண்டி பந்தயம்
விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள வி.அய்யனார்புரம் கிராமத்தில் உள்ள மாமன்னர் சாலிவாகனன் குருபூஜை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. போட்டியில் மதுரை, தூத்துக்குடி, தேனி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஜோடி மாடுகள் பங்கேற்றது. சின்ன மாடு, பெரிய மாடு என இரு பிரிவுகளாக இந்த போட்டி நடந்தது.
முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து, போட்டியை தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். மாட்டு வண்டி போட்டியை பல்வேறு இடங்களில் சாலைகளின் ஓரமாக நின்று பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
Related Tags :
Next Story