கமுதி அருகே கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்


கமுதி அருகே கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கமுதி அருகே கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

கமுதி

கமுதி அருகே கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சித்திரை பொங்கல் விழா

கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் உள்ள குருநாதர் சுவாமி குருபூஜை விழா மற்றும் பெரிய நாச்சியம்மன் கோவில் சித்திரை பொங்கல் விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. விழாவில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், உடல் முழுவதும் களிமண் சேறு பூசி, சேத்தாண்டி வேடம் எனும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் நிறைவு நாளான நேற்று இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயம், சிறிய மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.

இதில் பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.27 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.24 ஆயிரம் வழங்கப்பட்டது. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் வென்றவர்களுக்கு முதலாவது பரிசாக ரூ.24 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.21 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.18 ஆயிரம் மாடுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவா்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story