ஜல்லிக்கட்டில் துள்ளிக்குதித்த காளைகள்


ஜல்லிக்கட்டில் துள்ளிக்குதித்த காளைகள்
x

சரடமங்கலம், அல்லித்துறை கிராமங்களில் நடந்த ஜலலிக்கட்டில் காளைகள் துள்ளிக்குதித்தன. இதில் ஏராளமான வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர்.

திருச்சி

கல்லக்குடி, ஜூன்.7-

சரடமங்கலம், அல்லித்துறை கிராமங்களில் நடந்த ஜலலிக்கட்டில் காளைகள் துள்ளிக்குதித்தன. இதில் ஏராளமான வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர்.

ஜல்லிக்கட்டு

புள்ளம்பாடி ஒன்றியம் சரடமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் உள்ளூரை சேர்ந்த 577 காளைகள் கலந்து கொண்டன. இதேபோல் 278 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர்.முன்னதாக மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு காலை 6.45 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. தொடர்ந்து இந்த ஜல்லிக்கட்டு மதியம் 1 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சில காளைகள் திமிறிக்கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன. ஒரு சில மாடுகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்கினர்.

ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளின்உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் சில்வர் அண்டாக்கள், சைக்கிள், மிக்சி, குக்கர், குத்துவிளக்கு, வெள்ளி மற்றும் தங்ககாசுகள் என ரூ.10 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த ஜல்லிக்கட்டு காளைக்கான பரிசை புதுக்கோட்டை மாவட்டம் மங்கத்தாங்பட்டி கணேஷ்கருப்பையா காளை பெற்றது. சிறந்த மாடுபிடி வீரருக்கான பரிசை திருமங்கலம் குட்டீஸ் குரூப் நவீன் தட்டிச்சென்றார்.

அல்லித்துறை

இதேபோல் சோமரசம்பேட்டை அருகே உள்ள அல்லித்துறை கிராமம் செவிட்டு மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட காளைகளும் 400-க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்களும் கலந்து கொண்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, மின்விசிறி, சைக்கிள், உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.


Next Story