குண்டும், குழியுமான சாலை
குண்டும், குழியுமான சாலை
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருபாயத்தான்குடி வீரப்பெருமாள் நல்லூர் கீழ தெரு சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-இளமாறன், வீரப்பெருமாள் நல்லூர்.
Related Tags :
Next Story