பாய்லர் ஆலை குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து 5 வீடுகளில் திருட்டு


பாய்லர் ஆலை குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து 5  வீடுகளில் திருட்டு
x

பாய்லர் ஆலை குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து 5 வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

பாய்லர் ஆலை குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து 5 வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பாய்லர் ஆலை குடியிருப்பு

திருவெறும்பூர் அருகே மத்திய பொது துறை நிறுவனமான பாய்லர் ஆலை உள்ளது. இங்கு பணியாற்றுபவர்களுக்கு நிறுவன வளாகத்தில குடியிருப்புகள் உள்ளன. தற்போது, பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவுக்கும் சென்றுவிட்டனர். இதைநோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நேற்று முன்தினம் இரவு குடியிருப்புக்குள் புகுந்து 5 வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலையில் வீடுகள் திறந்து கிடப்பதை பார்த்து சிலர் திருவெறும்பூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

வழக்குப்பதிவு

வீட்டின் உரிமையாளர்கள் வந்தபிறகுதான் திருட்டு போன பணம் மற்றும் நகைகளின் விவரம் தெரியவரும். குடியிருப்பு வளாகத்தை சுற்றி 12 கேட்கள் உள்ளன. இதில் 3 நுழைவுவாயிலில் மட்டுமே கண்காணிப்பு கேமரா உள்ளது. அந்த கண்காணிப்பு கேமராக்களும் வேலை செய்யவில்லை. இதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரேநாள் இரவில் 5 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு நடைபெற்ற சம்பவம் குடியிருப்புவாசிகளை அச்சம் அடைய செய்துள்ளது. எனவே இதுபோன்ற திருட்டுகளை தடுக்க அனைத்து நுழைவுவாயில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் கூடுதல் காவலர்கள் நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story