அனாதையாக வாழ்ந்து இறந்த முதியவர் உடல் அடக்கம்-கிராம மக்கள் நெகிழ்ச்சி


அனாதையாக வாழ்ந்து இறந்த முதியவர் உடல் அடக்கம்-கிராம மக்கள் நெகிழ்ச்சி
x

அனாதையாக வாழ்ந்து இறந்த முதியவர் உடலுக்கு கிராமமே திரண்டு அஞ்சலி செலுத்தி உடலை அடக்கம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை

வந்தவாசி

அனாதையாக வாழ்ந்து இறந்த முதியவர் உடலுக்கு கிராமமே திரண்டு அஞ்சலி செலுத்தி உடலை அடக்கம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்திற்கு சுமார் 45 வருடங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அனாதையாக ஆதரவு தேடி வந்த ஒருவலர் வந்தார். அந்த கிராமத்தைச் சார்ந்த நபர்களே அவருக்கு சபரிமுத்து என பெயர் வைத்து உதவி வந்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டினரும் அவருக்கு உணவு வழங்கி ஆதரித்து வந்தனர்.45 ஆண்டாக அவரை கிராம மக்கள் எந்த குறையும் இன்றி கவனித்துக்கொண்டனர்.

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல் நலிவுற்று இருந்த சபரி முத்துவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்த்தனர். நேற்று முன்தினம் அவர் இறந்து விட்டார். அனாதையாக வந்த அந்த நபருக்கு அந்த கிராமம் தான் குடும்பம் அந்த கிராமத்தின் இளைஞர்களும் கிராமத்து மக்களும் ஒன்றிணைந்து சபரி முத்துவை தங்கள் வழக்கப்படி இறுதி மரியாதை செலுத்தி ஊர்வலம் நடத்தி உடலை அடக்கம் செய்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு கண்ணீர் சிந்தி நல்லடக்கம் செய்த நிகழ்வு பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story