ஒகேனக்கல் பரிசல் துறையில் தீவிபத்து லைப் ஜாக்கெட்டுகள் எரிந்து சேதம் போலீசார் விசாரணை


ஒகேனக்கல் பரிசல் துறையில் தீவிபத்து  லைப் ஜாக்கெட்டுகள் எரிந்து சேதம்  போலீசார் விசாரணை
x

ஒகேனக்கல் பரிசல் துறையில் ஏற்பட்ட தீவிபத்தில் லைப் ஜாக்கெட்டுகள் எரிந்து சேதமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல் பரிசல் துறையில் ஏற்பட்ட தீவிபத்தில் லைப் ஜாக்கெட்டுகள் எரிந்து சேதமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா தலம்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு தினமும் ஏராளனமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் குளித்தும், பாதுகாப்பு உடை (லைப் ஜாக்கெட்) அணிந்து பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லில் பகரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதன் காரணமாக பரிசல் ஓட்டிகள் காவிரி கரையோரம் பரிசல்களை கவிழ்த்து வைத்துள்ளனர். இதனிடையே ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடையை நீக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அடிக்கடி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதிப்பதை கண்டித்து பரிசல் ஓட்டிகள் நேற்று பரிசல்களை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தீயில் எரிந்து சேதம்

இந்தநிலையில் பரிசல் துறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் அணிந்து செல்லும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைப் ஜாக்கெட்டுகள் (பாதுகாப்பு உடை) தீயில் எரிந்து சேதமானது. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கு மேற்பட்ட பரிசல்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து ஒகேனக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஒகேனக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story