சீமானின் உருவபொம்மை எரிப்பு - தமிழ் புலிகள் அமைப்பினர் கைது


சீமானின் உருவபொம்மை எரிப்பு -  தமிழ் புலிகள் அமைப்பினர் கைது
x

சீமானின் உருவபொம்மை எரித்த தமிழ் புலிகள் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்

மதுரை


ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, அவரை கண்டித்து தமிழ்புலிகள் அமைப்பினர் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே சீமானின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சீமானுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவர்களை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக சீமானின் உருவபொம்மை எரித்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுனத்தினர். இதனால் போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story