தீயில் கருகிய பெண் சிகிச்சை பலனின்றி சாவு


தீயில் கருகிய பெண் சிகிச்சை பலனின்றி சாவு
x

தீயில் கருகிய பெண் சிகிச்சை பலனின்றி சாவு

நாகப்பட்டினம்

வேதாரண்யம் நகர் பகுதி சர்வகட்டளையை சேர்ந்தவர் குமார் (வயது49). இவரது மனைவி மகேஸ்வரி (41). இவர்கள் கடந்த 4-ந்தேதி எண்ணெய் சட்டியில் வடை சுட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக எண்ணெய் சட்டி கவிழ்ந்து தீப்பிடித்தது. மேலும் அருகே வைத்திருந்த பெட்ரோல் கேனும் தீப்பிடித்ததில் கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். தீயில் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் கடந்த 9-ந்தேதி இறந்தார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மகேஸ்வரியும் நேற்றுமுன்தினம் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டா் குணசேகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story