செல்போனில் செல்பி எடுத்தபடி பஸ்சை ஓட்டிய டிரைவர்
செல்போனில் செல்பி எடுத்தபடி பஸ்சை ஓட்டிய டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
முதுகுளத்தூர்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பணிமனைக்கு உட்பட்ட 2 பி அரசு டவுன் பஸ் பரமக்குடிக்கு சென்று வருகிறது. இந்த பஸ்சை டிரைவர் தேவ பிரபு ஓட்டி உள்ளார். முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடி சென்று திரும்பும்போது 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த நிலையில் டிரைவர் தேவபிரபு தன்கையில் வைத்திருந்த செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டு பஸ்சை ஓட்டியதால் பயணிகள் அச்சமடைந்தனர். இதனால் டிரைவரை பயணிகள் எச்சரித்ததால் டிரைவருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து முதுகுளத்தூர் பணிமனை கிளை மேலாளரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- 2 பி பஸ் டிரைவர் தேவபிரபு செல்பி எடுத்தபடி பஸ்சை ஓட்டிய வீடியோ வைரலாகி இருக்கிறது. இதன் அடிப்படையில் தேவபிரவு மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.