பஸ்-கார் மோதல்; 2 பேர் பலி


பஸ்-கார் மோதல்; 2 பேர் பலி
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பஸ்-கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பஸ்-கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

பஸ்-கார் மோதல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர்கள் மகேந்திரன் (வயது 21), விஜயலட்சுமி (37), மாலதி (45), சுப்புலட்சுமி (35). இவர்கள் உறவினர்கள் ஆவர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் துக்க நிகழ்ச்சிக்காக காரில் வந்தனர். காரை மகேந்திரன் ஓட்டி வந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து புறப்பட்ட ஒரு தனியார் பஸ்சில் 40-க்கும் மேற்பட்டோர் மதுரையை நோக்கி பயணித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை ரோட்டில் நத்தம்பட்டி அருகே அந்த தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மகேந்திரன் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

2 பேர் பலி

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் மகேந்திரன், மாலதி ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். விஜயலட்சுமி, சுப்புலட்சுமி ஆகிய 2 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ைச பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story