பஸ் மோதி கால்வாயில் கவிழ்ந்த ஆட்டோ; பெண் பலி


பஸ் மோதி கால்வாயில் கவிழ்ந்த ஆட்டோ; பெண் பலி
x

ராஜபாளையம் அருகே காசி சுற்றுலா ரெயிலை பிடிக்க சென்ற போது பஸ் மோதி கால்வாயில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே காசி சுற்றுலா ரெயிலை பிடிக்க சென்ற போது பஸ் மோதி கால்வாயில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார்.

காசிக்கு சுற்றுலா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்தவர் பழனிநாதன். இவரது மகள் பூரண புஷ்பம் (வயது 55). இவர் காசி செல்லும் சிறப்பு ரெயிலில் காசிக்கு செல்ல முன் பதிவு செய்திருந்தார். இதற்காக முகவூரில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி அளவில் பஸ்சில் ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்திற்கு தனது தந்தையுடன் வந்தார். பின்னர் அங்கிருந்து ஆட்டோ மூலம் ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, மதுரையில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு சங்கரன் கோவில் சாலையில் வந்து கொண்டிருந்த அரசு பஸ், ஆட்டோ மீது மோதியதாக கூறப்படுகிறது.

ெபண் பலி

பஸ் மோதியதில் சாலையோரம் இருந்த கழிவுநீர் கால்வாயில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பூரண புஷ்பம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதில் ஆட்டோ ஓட்டுனர் சாமிராஜ், பழனிநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story