கார் மீது பஸ் மோதி டிரைவர் பலி
கொள்ளிடம் அருகே கார் மீது அரசு பஸ் மோதியதில் டிரைவர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே கார் மீது அரசு பஸ் மோதியதில் டிரைவர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிரைவர் பலி
கும்பகோணத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று, சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எருக்கூர் தூய சிந்தாத்திரை மாதா ஆலயம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, புத்தூரில் இருந்து சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்த காரின் மீது அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த புத்தூர் கிராமம், மேல தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவபாலன் (வயது 38) என்பவர் காருக்குள்லேயே உடல் நசுங்கி இறந்தார்.
2 வயதில் ஆண் குழந்தை
மேலும் காரில் பயணம் செய்த புத்தூரை சேர்ந்த சக்திவேல் (28), பாலமுருகன் (27) ஆகிய இருவரும் சிறு காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த சிவபாலன் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த நிலையில் புத்தூருக்கு வந்து ஒரு மாத காலம் ஆகிறது. மேலும் இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓவியா (32) என்பவருடன் திருமணம் நடந்து, தற்போது 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.