பஸ் மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது - தொழிலாளி படுகாயம்


பஸ் மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது - தொழிலாளி படுகாயம்
x

பெரும்பாறை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் பைக் தீப்பிடித்து எரிந்தது,தொழிலாளி படுகாயம் அடைந்து உள்ளார்.

திண்டுக்கல்


திண்டுக்கல் மாவட்டம், பெருமாள்கோவில்பட்டி அமலி நகரை சேர்ந்தவர் வர்கீஸ் (வயது 21). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயமேரி. இவர், பிரசவத்துக்காக தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

அவரை பார்ப்பதற்காக வர்கீஸ் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பெரும்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மூலக்கடை-புல்லாவெளி பகுதியில் வந்தபோது அந்த வழியாக எதிரே வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து வர்கீஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.இதற்கிடையே பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது . சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்ததில் மோட்டார் சைக்கிள் முழுவதும் நாசமானது.

இந்த நிலையில் பஸ்சில் வந்த பயணிகள், காயம் அடைந்த வர்கீசை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story