மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதல்; வாலிபர் பலி


மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதல்; வாலிபர் பலி
x

மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதல்; வாலிபர் பலி

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள கீரனூர் மனவெளி தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ராஜேஷ்குமார்(வயது26). அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வடிவேல்(28). சம்பவத்தன்று ராஜேஷ்குமார் மாமா இறந்து விட்டதால் இறுதி ஊர்வலத்திற்கு பூக்கள் வாங்குவதற்காக 2 ேபரும் மோட்டார்சைக்கிளில் கும்பகோணத்திற்கு சென்றனர். பின்னர் பூக்ககள் வாங்கிவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாக்கோட்டை ரங்கராஜபுரம் அருகே வந்தபோது, நன்னிலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேரும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேலு பரிதாபமாக இறந்தார். ராஜேஷ்குமார் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கபட்டார். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story