தலைவாசல் அருகே டிராக்டர் மீது பஸ் மோதல்; 22 பேர் காயம்


தலைவாசல் அருகே  டிராக்டர் மீது பஸ் மோதல்; 22 பேர் காயம்
x

தலைவாசல் அருகே டிராக்டர் மீது பஸ் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் 22 பேர் காயம் அடைந்தனர்.

சேலம்

தலைவாசல்,

டிராக்டர் மீது பஸ் மோதல்

கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. தலைவாசல் ஏரிக்கரை பகுதியில் வந்த போது முன்னால் கரும்பு லோடு ஏற்றி சென்ற டிராக்டரின் பின்பக்கம் பஸ் திடீரென மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்சில் இருந்தவர்கள் அபயகுரல் எழுப்பினார்கள்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து தலைவாசல் போலீசார் விரைந்து வந்தனர்.

22 பேர் காயம்

இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 22 பேர் காயம் அடைந்தனர். 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய பஸ், பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

விபத்து குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தினர். பஸ் டிரைவர் அமிர்தராஜ் (வயது 30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று காலை 9.30 மணி அளவில் விபத்து நடந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story